| சென்னை:""நம்மை நாமே அழித்துக் கொள்கிற அளவிற்கு, நம்மிடத்திலே ஒற்றுமை குலைந்து வருகிறது என்பதை எண்ணிப் பார்க்கும்போது, வேதனை அடைகிறேன்'' என, தி.மு.க., தலைவர் கருணாநிதி பேசினார்.தி.மு.க., சொற்பொழிவாளர்கள் கூட்டத்தில், கருணாநிதி பேசியதாவது:தி.மு.க.,வில் மகளிர் அணி, இளைஞர் அணி, மாணவர் அணி, தொழிலாளர் அணி, இலக்கிய அணி என, பல அணிகள் இருக்கின்றன. அணிகள் வளர வேண்டும், வலிமை பெற வேண்டும் என்று எண்ணுகின்ற அத... |