|
சென்னையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற விழாவில் கவிஞர் பிறைசூடனை கெளரவிக்கிறார் காங்கிரஸ் மூத்த தலைவர் குமரி அனந்தன் (வலமிருந்து 2-வது). உடன் (இடமிருந்துசென்னை, ஜூன் 24: கண்ணதாசன் பாடல்கள் சாகாவரம் பெற்றவை என்று நடிகர் சிவகுமார் புகழாரம் சூட்டினார்.மறைந்த கவிஞர் கண்ணதாசனின் 86-வது பிறந்த நாள் விழா தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி சார்பில் சென்னையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.விழாவில் நடிகர் சிவகுமார் பேசியதாவது:...
|
|
|
திருக்கோவிலூர், ஜூன் 24: திருக்கோவிலூர் அருகே மணலூர்பேட்டையில் இலவச கண் சிகிச்சை முகாம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.அரிமா குடும்பம், சென்னை சரோ குரூப் நிறுவனம், மாவட்ட பார்வை இழப்புத் தடுப்புச் சங்கம், புதுச்சேரி அரவிந்த் கண் மருத்துவமனை ஆகியவை இணைந்து நடத்திய இந்த முகாமுக்கு அரிமா சங்கத் தலைவர் எஸ்.குழந்தைவேலு தலைமை தாங்கினார்.மாவட்டத் தலைவர்கள் அம்மு.ரவிச்சந்திரன், தா.சம்பத் ஆகியோர் முன்னிலை வகித்தனர்....
|
|
|
செய்யாறு, ஜூன் 24: செய்யாறை அடுத்துள்ள பெருங்கட்டூர் ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு ரூ.5 லட்சம் மதிப்புள்ள ஸ்கேன் இயந்திரத்தை ஆரணி மக்களவை உறுப்பினர் எம்.கிருஷ்ணசாமி சனிக்கிழமை வழங்கினார்.பெரூங்கட்டூர் ஆரம்ப சுகாதார நிலையத்தில் ஆரணி நாடாளுமன்ற உறுப்பினர் தொகுதி திட்டத்தின் கீழ் சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது. செய்யாறு சுகாதார மாவட்ட துணை இயக்குநர் தேவ பார்த்தசாரதி முன்னிலை வகித்தார். ஆரணி எம்.பி....
|
|
|
விருதுநகர் மாவட்டத்தில் விலையில்லா மிக்ஸி, கிரைண்டர், மின்விசிறி ஆகியவற்றில் பழுது ஏற்பட்டால் சீர் செய்யும் வகையில் இலவச பழுது நீக்கும் சேவை மையம் தொடங்கப்பட்டுள்ளது.இது குறித்து மாவட்ட ஆட்சியர் மு.பாலாஜி சனிக்கிழமை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:முதல்வரின் சிறப்புத் திட்டம் மூலம் அரிசி பெறும் குடும்ப அட்டை வைத்திருப்போருக்கு விலையில்லாப் பொருள்கள் வழங்கப்பட்டு வருகின்றன. விருதுநகர் மாவட்டத்தில் 7...
|
|
|
விழுப்புரம் ஜூன் 24: ஐ.என்.டி.யு.சி. விழுப்புரம் மாவட்டத் தலைவராக ஜெயசுதா சிவா (படம்) நியமனம் செய்யப்பட்டுள்ளார்.÷இந்திய தேசிய தொழிற்சங்க காங்கிரஸ் தமிழ்நாடு கிளையின் 25-வது மாநில பிரதிநிதிகள் மாநாடு கடந்த மே மாதம் திருச்சியில் நடைபெற்றது. இதில் அனைத்து மாவட்ட நிர்வாகிகளை நியமிக்கப்பட்டனர்.அதனடிப்படையில் விழுப்புரம் மாவட்ட ஐ.என்.டி.யு.சி. தலைவராக ஜெயசுதா சிவா நியமனம் செய்யப்பட்டுள்ளதாக அறிக்கையில்...
|
|
|
குடியாத்தம், ஜூன் 24: உலக சுற்றுச் சூழல் தினத்தை முன்னிட்டு, குடியாத்தம் நேஷனல் மேல்நிலைப் பள்ளியில் தேசிய பசுமைப்படை சார்பில் விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது.பள்ளித் தலைமையாசிரியர் பி. குருநாதன் தலைமை வகித்தார். வேலூர் மாவட்ட சுற்றுச் சூழல் ஒருங்கிணைப்பாளர். து. அன்புரோஸ் கொடியசைத்து ஊர்வலத்தைத் தொடங்கி வைத்தார்.நகரின் முக்கிய வீதிகள் வழியாகச் சென்ற ஊர்வலம் பள்ளி வளாகத்தில் நிறைவுற்றது. அதைத் தொடர்ந்து...
|
|
|
திருச்செந்தூர், ஜூன் 24: திருச்செந்தூரில் பத்தாம் வகுப்பில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவருக்கு காமராஜர் நற்பணி இயக்கம் சார்பில் கல்வி உதவித்தொகை வழங்கப்பட்டது.பெருந்தலைவர் காமராஜர் பிறந்தநாளை முன்னிட்டு பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் 480 மதிப்பெண் பெற்ற பேச்சிமுத்து என்ற மாணவரை பாராட்டி காமராஜர் நற்பணி இயக்கம் சார்பில் கல்வி உதவித்தொகை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.நிகழ்ச்சியில் காமராஜர் நற்பணி இயக்கத்...
|
|
|
பல்லடம், ஜூன் 24: பல்லடம் தொகுதி பணிக்கம்பட்டி, சுக்கம்பாளையம், பெருந்தொழுவு ஊராட்சி பகுதியில் விலையில்லா மிக்சி, கிரைண்டர், மின்விசிறி வழங்கும் விழா சனிக்கிழமை நடைபெற்றது.திருப்பூர் மாவட்ட ஆட்சியர் மதிவாணன் தலைமை வகித்தார். திருப்பூர் ஆர்.டி.ஒ. செங்கோட்டையன் வரவேற்றார். விழாவில் தமிழ்நாடு கேபிள் டிவி கழக தலைவர் ராதாகிருஷ்ணன் பேசினார்.இதில் 4,547 பேருக்கு விலையில்லா மிக்சி, கிரைண்டர், மின்விசிறிகளை...
|
|
|
தக்கலை, ஜூன் 24: சுங்கான்கடை அருள்மிகு ஐயப்பன் கோவிலில் ஞாயிற்றுகிழமை வருஷாபிஷேக விழா நடைபெற்றது. இதில் திரளானோர் பங்கேற்றனர்.தொடர்ந்து கணபதி ஹோமம், சாஸ்தாவுக்கு கலச பூஜை, கலசாபிஷேகம், அலங்கார, தீபாராதனை உள்ளிட்டவை நடைபெற்றன.இதில் திரளான பக்தர்கள் பங்கேற்றனர். அனைவருக்கும் பிரசாதம், அன்னதானம் வழங்கப்பட்டது. மாலையில் திருவிளக்கு பூஜை, இரவில் சிறப்பு அலங்கார தீபாரதனை...
|
|